டெல்லியில் இருந்து திரும்பிய நாகை நபர்களுக்கு கொரோனா: ஒத்துழைக்க மறுத்ததால் பரபரப்பு
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்டு அதன் பின்னர் தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
ஏற்கனவே தமிழகத்தில் டெல்லி சென்று திரும்பிய 264 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இந்த நிலையில் டெல்லி மாநாடு சென்று திரும்பிய நாகையை சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா பாதித்துள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அந்த ஐவரும் அவருடைய குடும்பத்தினரும் மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர்
ஆனால் அவர்கள் வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதன் பின் அவர்களது வீட்டிலேயே இரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து சோதனை செய்ததில் தற்போது அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்