கொரோனாவுக்கு ஆண்கள் அதிகமாக பலியாவது ஏன்? அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு பலியானவர்களில் பெண்களை விட ஆண்கள் அதிகம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனாவால் பலியானவர்களில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பலியானவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
புகை, மது ஆகிய பழக்கங்கள் பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் இருப்பதாலும், சமூக விலகலை ஆண்கள் சரியாக கடைபிடிப்பதில்லை என்றும், ஊரடங்கு உத்தரவை மீறுவது பெரும்பாலும் ஆண்கள் தான் என்றும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது