ஊரடங்கு உத்தரவை மீறி குதிரைப்பந்தயம்: திருந்தாத அமெரிக்கா
அமெரிக்காவில் 3 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உடையவர்கள் இருக்கும் போது சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் குதிரை பந்தயம் நடைபெற்றது. அபிபேயா என்ற மாகாணத்தில் நடைபெற்ற இந்த குதிரை பந்தயத்தில் பங்கேற்கவும் பார்வையிடவும் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர்
சமூக விலகலை கூட கடைபிடிக்காமல் நெருக்கமாக அவர்கள் பங்கேற்றதால் ஏற்கனவே அபாயத்தில் இருக்கும் அமெரிக்கா, மேலும் அபாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்