ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தெலுங்கானா முதல்வர் விளக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியதை அடுத்து இன்னும் ஒரு வாரத்தில் ஊரடங்கு உத்தரவு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்கள் அனைவரும் இருந்தனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 3 வரை நீட்டிக்கப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் விளக்கமளித்தபோது தெலங்கானாவில் ஜூன் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் ஏப்ரல் 15க்கு பிறகு இரண்டு வாரம் ஊரடங்கை நீட்டிக்கலாம் என கருத்து மட்டுமே தெரிவித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தான் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.