ஆடம்பர பொருட்களின் விற்பனை அடிவாங்குமா?
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திடீரென 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அன்றாடம் வேலை செய்து குடும்பத்தை நடத்தும் குடும்பத்தலைவர்களுக்கு மட்டுமின்றி மாத மாத சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துபவர்களுக்கும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது
ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் அந்த மாத சம்பளத்தை அந்த மாதமே செலவழித்த பொதுமக்களுக்கு தற்போது கொரோனா ஒரு நல்ல பாடம் கற்பித்துள்ளது.
செல்போன் டிவி கம்ப்யூட்டர் நகைகள் என ஆடம்பர பொருட்கள் வாங்குவது, வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஓட்டலில் சென்று சாப்பிடுவது, பீச் பார்க் என்று சுற்றுலா செல்வது மற்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு சாப்பிடுவது ஆகிய பழக்க வழக்கங்கள் கொரோனா பாதிப்புக்கு பின் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்தால் மட்டுமே இது போன்ற இயற்கை பேரிடர் நேரத்தில் உதவும் என்ற ஒரு பாடத்தை கொரோனா கற்றுக் கொடுத்துள்ளது
எனவே உலகம் முழுவதும் உள்ள மக்கள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்வார்கள் என்றும் கொரோனா பாதிப்புக்கு பின்னர் இயல்புநிலை திரும்பிய பின்னர் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை அடிவாங்கும் என்றும் கூறப்படுகிறது
அதேபோல் பங்கு வர்த்தகம் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவையும் இனி பெரிதாக இருக்காது என்றும் தங்க நகை வாங்குவது, பிக்சட் டிபாசிட் போடுவது மட்டுமே பாதுகாப்பானது என்பதை மக்கள் உணர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது