இரங்கல் தெரிவித்த முதல்வர்
கொரோனா வைரஸ் தமிழகத்தை தாக்க தொடங்கியதிலிருந்தே மருத்துவர்கள் நர்ஸ்கள் மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி தங்களது குடும்பத்தை கூட கவனிக்காமல் பணிபுரிந்து வருகின்றனர்
தமிழக மக்களை கொரோனாவுக் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அருண் காந்தி என்பவர் நேற்று திடீரென நெஞ்சு வலியால் மரணமடைந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது: சென்னை, மைலாப்பூர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த திரு.அருண்காந்தி என்பவர் நேற்று ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் அனுதாபங்களும்
மேலும் காவலர் திரு.அருண்காந்தி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு சிறப்பினமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், திரு.அருண்காந்தி அவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்