சென்னையில் மேலும் ஒருவர் பலி

பலி எண்ணிக்கை மேலும் ஒன்று உயர்வு

தமிழகத்தில் தினமும் 50 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 9 பேர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியாகி இருப்பதாக திடுக்கிடும் செய்தி வந்துள்ளது கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தனியார் விமான நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்த இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி பலியாகி விட்டதாகவும் தெரிகிறது

மேலும் உயிரிழந்த விமான நிறுவன ஊழியரின் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவித்து தெரிந்து உள்ளதால் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply