பட்டினியால் உயிரிழந்த முதியவர்

சிவகெங்கை அருகே பரபரப்பு

பேருந்து நிலையத்தில் தங்கி இருந்த அருகே முதியவர் ஒருவர் பட்டினியால் முறையில் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை விட பசி பட்டினியால் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்கனவே எச்சரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அனை நிரூபிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பட்டினியால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சக்குடி பஸ் நிலையத்தில் தங்கி இருந்த முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களாக சாப்பிடவில்லை என்றும் அதனால் அவர் பட்டினியால் உயிர் இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply