தமிழகத்தை முந்தியதால் பரபரப்பு
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
அதுமட்டுமின்றி நேற்று மட்டும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் டெல்லி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது இதனை அடுத்து கொரோனாவால் டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 1069 ஆக உயர்ந்து உள்ளது இதனால் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு டெல்லி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் மாநிலமாக உள்ளது என்பது தெரிந்ததே