என்ன ஆகிறது மாணவர்களின் எதிர்காலம்?
கொரோனா எதிரொலியாக கடந்த சில வாரங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பள்ளிகள் அனைத்தும் இந்த ஆண்டு கல்வியாண்டு இறுதி அதாவது ஜுன் வரை மூட நியூயார்க் மேயர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்துள்ளனர் என்பதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
உலகிலேயே கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியான பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க நியூயார்க்கில் உள்ள அனைத்து பள்ளிகளும் இந்த ஆண்டு இறுதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் ஆன்லைனில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தலாம் என்றும் நியூயார்க் மேயர் அறிவித்துள்ளார்