உலகம் முழுவதும் வேலையிழப்பு: அமேசான் மட்டும் அள்ளி வழங்கும் வேலைவாய்ப்பு
ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டு பணியாளர்களை குறைத்து வரும் நிலையில் அமேசான் நிறுவனம் மட்டும் புதியதாக வேலைக்கு ஆட்களை எடுத்து வருகிறது.
கடந்த மாதம் மட்டும் ஆன்லைனில் ஆர்டர்கள் குவிந்ததால் சுமார் 1 லட்சம் பேரை அந்நிறுவனம் வேலைக்கு அமர்த்திய நிலையில் தற்போது மீண்டும் அமேசான் நிறுவனம் 75,000 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய வாங்கி வருகின்றனர். இதனால் ஆன்லைன் நிறுவனங்களின் வியாபாரம் தற்போது உச்சத்தில் உள்ளது. எனவே கடந்த மாதம் ஒரு லட்சம் பணியாளர்களையும் இந்த மாதம் 75000 ஆயிரம் பணியாளர்களையும் வேலையில் அமர்த்திய அமேசான், ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதமும் தொடர்ந்தால் அடுத்த மாதமும் புதியதாக ஒரு லட்சம் பேர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது