பிரிட்டனுக்கு கேரளா முதல்வர் அனுப்பி வைத்த 268 பேர்: குவியும் பாராட்டுக்கள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து உள்பட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் பலர் வெளியூர், வெளிநாடுகளில் சிக்கி சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் உள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்த 268 பிரிட்டன் நாட்டினர்களை நேற்று கேரள முதல்வர் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
பிரிட்டன் ஏர்வேஸ் விமானத்தில் திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் ஆகிய இரு இடங்களில் இருந்து இரண்டு விமானங்கள் நேற்று கிளம்பின. முதல்வரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது