தேரை இழுத்த பொதுமக்களை வேடிக்கை பார்த்த போலீஸ்
லாக்டவுன் என்றாலே 4 பேர்களூக்கு பேர் ஒன்றாக கூடக்கூடாது என்று விதியிருக்கும்போது ரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி தேர் இழுத்தபோதும் அதை கண்டுகொள்ளாமல் போலீஸ் இருந்தது பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது
கேரளாவில் லாக்டவுன் காரணமாக தந்தை டிஸ்சார்ஜ் ஆவதால் ஆட்டோவை போலீஸ் அனுமதிக்கவில்லை. அதனால் அவருடைய மகன், தந்தையை ஒரு கிமீ தோளில் தூக்கி வந்தார். இந்த அளவுக்கு ஸ்டிரிக்ட்டா லாக்டவுன் விதிகளை ஒருபக்கம் போலீஸ் கடைபிடிக்கும்போது இன்னொரு பக்கம் கர்நாடகாவில் கலாபுராகி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சமூக விலகலைம் பின்பற்றாமல் தேரை இழுக்கும் நிகழ்ச்சியை நடத்தியபோது போலீஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது.
கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தில் சித்தாபூர் தாலுகாவில் சித்தலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்ட நிகழச்சியில் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இதுதான் லாக்டவுன் விதிகளை மதிக்கும் லட்சணம? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.