ஆனால் இரு மடங்காக உயர்ந்தது எப்படி?
நேற்றுமுன் தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதாகவும் இன்னும் மூன்றே நாட்களில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி விடும் என்றும் கூறினார்
ஆனால் நேற்று முன் தினத்தை விட நேற்று சுமார் இரு மடங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இருப்பினும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்களில் இல்லாவிட்டாலும் இன்னும் ஒருசில நாட்களில் தமிழகம் கொரோனா இல்லா மாநிலமாக மாற அதிக வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது