ஏப்ரல் 20 முதல் கட்டணம் உண்டு

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு

ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி சுமை அதிகம் இருப்பதால் சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில வாரங்களாக சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 20 முதல் மீண்டும் சுங்கக்கட்டணம் வசூல் செய்யவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டுமே தற்போது சென்று கொண்டிருப்பதால் அவற்றுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பது சரியல்ல என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தெரிவித்துள்ளது

Leave a Reply