சோனியா குறித்து சர்ச்சை பேச்சு: அர்னாப் கோஸ்வாமியை அடித்த மர்ம நபர்கள்

சோனியா குறித்து சர்ச்சை பேச்சு: அர்னாப் கோஸ்வாமியை அடித்த மர்ம நபர்கள்

சமீபத்தில் சாமியார்கள் 3 பேர் ஒரு குழுவினர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தனது ரிபப்ளிக் தொலைக்காட்சியில் ஆவேசமாக பேசிய அர்னால் கோஸ்சுவாமி இந்த தாக்குதலை கண்டித்து அறிக்கை விடாமல் சோனியா காந்தி மௌனமாகவே உள்ளார் என்றும் \இத்தாலி சோனியா\ என்றும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார்

இதனை அடுத்து நாடு முழுவதும் அர்னால் கோஸ்சுவாமிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன இந்த நிலையில் நேற்று இரவு அர்னால் கோஸ்சுவாமி தனது டிவி பணிகளை முடித்துக் கொண்டு மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவருடைய காரை மறித்தனர். அதன்பின் அவரை தாக்கியதாக தெரிகிறது

இதனையடுத்து அர்னால் கோஸ்சுவாமி ஆவேசமாக அந்த இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று வீடியோ பேசியுள்ளார் இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply