மொபைல் ரீசார்ஜ் கடைகள் இயங்கலாம்: மத்திய அரசு அனுமதி

மொபைல் ரீசார்ஜ் கடைகள் இயங்கலாம்: மத்திய அரசு அனுமதி

மே 3 வரை இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் ஏப்ரல் 20 முதல் ஊரடங்கு ஒருசில இடங்களில், ஒரு சில துறைகளுக்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒருசில தளர்வுகளை தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி மொபைல் ரீசார்ஜ் கடைகள் இயங்கலாம் என்றும், மின்விசிறி ரிப்பேர் கடைகள் இயங்கலாம் என்றும், மாணவர்களுக்கான புத்தக கடைகள் நகர்ப்புறப் பகுதிகளிலும் தொடர்ந்து இயங்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1409 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாகவும், கடந்த 28 நாளில் 12 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை இன்றும், 23 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும் மத்திய சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply