அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில் இன்று 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை தமிழகத்தில் மொத்தம் 1755 பயிர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது
அதேபோல் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 72 பேர்களில் 52 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் இதனை அடுத்து சென்னையில் மட்டும் 452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் இன்று கொரோனாவால் இருவர் உயிரிழந்ததை அடுத்து 22 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் 114 பேர் இன்று மட்டும் குணமாகி உள்ளனர் என்பதும் இதனை அடுத்து மொத்தம் 166 பேர் தமிழகத்தில் குணமாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது