காய்கறி, பழக்கடைகளுக்கு அனுமதியில்லை:

சென்னை மாநகராட்சி அதிரடி

இன்று முதல் 4 நாட்களுக்கு காய்கறி, பழக்கடைகளுக்கு அனுமதியில்லை என்றும், நடமாடும் வாகனங்கள் மூலமாக மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக முழு ஊரடங்கான 4 நாட்களில் காய்கறி கடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் மொத்தம் 8 மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு அமலானது. இதனையடுத்து காரணம் இல்லாமல் வெளியே வந்தால் கைது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, சேலம், மதுரை மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கும், சேலம், திருப்பூரில் 3 நாட்களுக்கும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இவை அல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலூர், தென்காசி, திருவாரூர் மாவட்டங்களில் இன்று ஒருநாள் மட்டும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் மருந்து கடைகள் தவிர பிற கடைகள் எதுவும் இயங்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply