29ஆம் தேதி வரை யாருக்காவது பாடிகாட் ஆக வர தயார்:

 பிரபல நடிகையின் வைரல் வீடியோ

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல நடிகர் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் வேடிக்கையான வினோதமான ஒரு சில நேரங்களில் மட்டும் சில உருப்படியான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் நடிகை அடாசர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் அவர் தமிழர்களின் கலைகளில் ஒன்றான சிலம்பு கலையை மிக அருமையாக சுழற்றி சுழற்றி அடித்து மாறியுள்ளார்

இதுகுறித்து அவர் கூறும்போது யாருக்காவது பாடிகார்டு வேண்டும் என்றால் உடனடியாக என்னை அணுகுங்கள். நான் நவம்பர் 29 வரை வீட்டில் சும்மா தான் இருப்பேன். அதுவரை நான் பாடிகாட் ஆக பணிபுரிய தயார்

ஆனால் அதன்பின்னர் கமாண்டர் ரிலீஸ் ஆவதால் நான் மிகவும் பிஸியாக இருப்பேன் இந்திய கலைகளில் ஒன்றான சிலம்பம் கலையை நான் தற்போது பயிற்சி பெற்று உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார் நடிகை அடா சர்மாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Leave a Reply