ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தில் வாணிபோஜன்!

பரபரப்பு தகவல்!

இயக்குனர் ஏஆர் முருகதாஸின் அடுத்த படத்தில் வாணி போஜன் நடிக்க உள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது

இந்நிலையில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் அந்த வெப்சீரிஸ்ஸை அவருடைய உதவியாளர்களில் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஊரடங்கு உத்தரவுக்கு பின் இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த வெப்சீரிஸ்ஸில் முக்கிய வேடத்தில் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது

ஏற்கனவே வாணி போஜன் நடித்த ’ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply