கொரோனாவால் வந்த நன்மை
கொரோனாவால் மனித குலத்திற்கே பல்வேறு தீமைகள் இருந்தாலும் கொரோனாவால் ஒரு சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் காற்றுமாசு. கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது
இந்த நிலையில் உபி மாநிலத்தை சேர்ந்த என்ற அரசு ஊழியர் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இமயமலையை புகைப்படம் எடுத்துள்ளார் இந்த புகைப்படத்தில் இமயமலை மிகத்தெளிவாகவே தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காற்று மாசு அதிகம் இருந்ததால் இமயமலையை இங்கிருந்து பார்க்க முடியாது என்றும் ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக காற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளதால் இமயமலையை மிக அழகாக தெளிவாக தெரிவதாகவும் அவர் தனது புகைப்படம் ஒரு கருத்து தெரிவித்துள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் ஆகிவருகிறது