சுவரையே திரையரங்கு திரையாக மாற்றலாம்

அடுக்குமாடி குடியிருப்பு தலைவரின் புதிய முயற்சி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சிலர் வாக்கிங் உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியே செல்கின்றனர்

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருக்கும் மக்களை வெளியே செல்லவிடாமல் செய்ய ஒரு புதுமையான ஐடியா செய்தார்

அதன்படி அவர் தனது வீட்டிலிருந்து புரொஜக்டர் மூலம் தனது வீட்டின் எதிரே உள்ள வீட்டின் சுவற்றை திரையாக பயன்படுத்தி அதில் திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறார்

இதனை அடுத்து டிரைவ் இன் தியேட்டர் போல அவரவர் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக அந்த திரையில் உள்ள திரைப்படங்களை பார்த்து பொழுதை போக்கி வருகின்றனர்

இவ்வாறு சுவரின் மீது திரைப்படங்களை ஒளிபரப்புவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதாக அந்த குடியிருப்பின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மற்ற அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களும் இதேபோல்செய்யலாமே என்ற என்று கூறப்படுகிறது

Leave a Reply