விவசாயிகள் புலம்பல்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வெங்காய விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்று முதல் தொடருவதை அடுத்து கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர்
வயல்களில் விளைந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும், கஷ்டப்பட்டு அறுவடை செய்த பொருட்களை மார்க்கெட் கொண்டு சென்று விற்பனை செய்வதிலும் பெரும் சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
குறிப்பாக வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு அதிக செலவு செய்வதாகவும் தொழிலாளிகள் கிடைக்காததால் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வாகன போக்குவரத்து செலவுகள் மிக அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்
ஆனால் மார்க்கெட்டில் தாங்கள் செலவு செய்த தொகை அளவுக்கு கூட வெங்காயம் விலை போகவில்லை என்றும் இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்
குவிண்டால் ஒன்றுக்கு 500 முதல் 600 ரூபாய் மட்டுமே தங்களுக்கு லாபம் கிடைப்பதாகவும் ஆனால் அதைவிட அதிகமாக வெங்காய உற்பத்திக்கு தாங்கள் செலவு செய்துள்ளதாக விவசாயிகள் புலம்பி உள்ளனர் இதனையடுத்து தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்