தமிழகத்திற்கு என்ன ஆச்சு?
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3550ஆக அதிகரித்துள்ளது
மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 308 பேருக்கு கொரோனா பாதிப்பு என செய்தி வெளிவந்தாலும் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 30 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 1409 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று 12,863 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தமிழகத்தில் மொத்தம் 153,489 பேர்களுக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது