10ஆம் வகுப்பு தேர்வு நடவடிக்கைகளில் திடீர் திருப்பம்!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை

பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்வுகளை நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை செய்து வருகிறது

அந்த வகையில் தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நேற்று நடைபெற்றது இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உள்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் செய்யப்பட்ட ஆலோசனைகள் சிலவற்றை தற்போது பார்ப்போம்

10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் 12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், தேர்வு மையங்களாக மாற்றப்படும்

தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, 20 மாணவர்களுக்கு பதிலாக 10 பேரை, மட்டும் அமர வைக்கப்படுவார்கள்

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்படுவார்கள்

வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, இ-பாஸ் வழங்கி, சொந்த ஊர்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்

தேவைப்படுவோருக்கு, பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும்

மேலும், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, அவர்கள் வசிப்பிடத்திலேயே தேர்வுகள் நடத்த சிறப்பு மையம்

Leave a Reply