ஆட்டோ என்ன பாவம் செய்தது?

 ஆட்டோ டிரைவர்களை கேள்வி

கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் 25-ஆம் தேதி விமான போக்குவரத்து ஆரம்பமாக உள்ளதாகவும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. விமானம் மற்றும் ரயில் முன்பதிவு தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது

ஆனால் விமானம் மற்றும் ரயில்களை இயக்க அனுமதி தந்த அரசு, ஆட்டோக்களுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. ஆட்டக்காரர்களாக நாங்கள் என்ன பாவம் செய்தோம்? என்று ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

இதனை அடுத்து ஆட்டோக்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply