ஒரிசா ஐகோர்ட் உத்தரவு
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்தால் அது பலாத்காரம் இல்லை என ஹைகோர்ட் நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஒரு பெண்ணை காதலித்து அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டுவிட்டு அதன் பின்னர் திருமணம் செய்ய மறுத்தால் அது பலாத்கார பிரிவில் வராது என்று ஒரு ஒடிஷா ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது காதலன் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது காதலன் தன்னுடன் உடலுறவு கொண்டு தன்னை கர்ப்பமாக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக புகார் அளித்திருந்தார்
இந்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு கொண்டுவிட்டு அதன் பின்னர் திருமணம் செய்ய மறுப்பது என்பது பலாத்கார குற்றத்தின் கீழ் வராது என்றும் ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் உடலுறவு கொண்டால் மட்டுமே பலாத்கார பிரிவில் வரும்என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது