காவல்துறையினர் வழுக்கி விழுந்துள்ளார்களா?

மனித உரிமை ஆணையம் கேள்வி

அம்பத்தூரில் போலீசாருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் தவறி விழுந்ததால் கை எலும்பு முறிந்தது என்பதுமான செய்தியை பார்ப்போம்

இந்த நிலையில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் கை முறிந்தது தொடர்பாக தாமாக முன்வந்து மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் இது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக்வும், காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளனவா என்று கேள்வி எழுப்பிய மனித உரிமை ஆணையம், இன்னும் இரண்டு வாரத்தில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply