புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்
நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு என அறிவித்துள்ள மத்திய அரசு’ UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்
* தடை செய்யப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளில் ஒரு மாதத்திற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
* தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு *
* தனிநபர்கள் யாரும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வெளியில் வரத் தடை
* இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு
* தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்
* மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை
* சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
* பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்
* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி
* அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது
* திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது
* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது
* சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து முடிவு செய்யலாம்
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது