ஜூலை 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க முடிவு:

மாநில அரசு அதிரடி

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேர்வுகள் எதுவும் நடத்தாமலேயே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு வரும் 15ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் தேர்வு தேதி நெருங்கும் போதுதான் தேர்வு நடைபெறுமா என்பது உறுதியாகத் தெரியும்

இந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது . கர்நாடக மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்கவும், ஷிப்ட் முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

அதுவரை தற்போது நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply