சென்னையில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும்:

திமுக தலைவர் வேண்டுகோள்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருவதையடுத்து சென்னையில் மிகுந்த கவனத்துடன் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

சென்னையில் நோய் கட்டுப்பாட்டு அதிகமுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக சென்னையில் ஐந்து மண்டலங்களில் மிக அதிகமான பாதிப்பு இருப்பதால் அந்த மண்டலங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யவேண்டுமென்றும் இந்த ஐந்து மண்டலங்களில் காப்பதில் அரசு முழு வீச்சுடன் செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த வேண்டுகோளை அடுத்து சென்னையில் ஐந்து மண்டலங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply