மகாராஷ்டிராவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3000 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு 90 ஆயிரத்து நெருங்குவதால் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் மட்டும் 3007 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து மகாராஷ்டிராவில் மொத்தம் 85 ஆயிரத்து 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39 ஆயிரத்து 314 பேர் குணம் அடைந்துள்ளதாக மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது