பகீர் தகவல்
உலக அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தை அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
உலக அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு பிரேசில் முதலிடத்தில் உள்ள நிலையில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா உலக அளவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது
உலக அளவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் பிரேசில் நாட்டில் 33 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்திலுள்ள அமெரிக்காவில் 20 ஆயிரத்து 677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 375 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
அந்த வகையில் பிரேசில், அமெரிக்காவை அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது