மங்காத்தா ‘பைக்’ விவகாரம்:

அஜித் இமேஜை வேண்டுமென்றே சிதைக்கும் விஜய் அபிமானிகள்

தல அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும், சர்வதேச பைக் ரேஸில் கலந்து கொண்டவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் மங்காத்தா திரைப்படத்தில் அவர் பைக் ஓட்டி காட்சியும் அதற்காக அவர் எடுத்த ரிஸ்க் அதிகம் என்றும் படக்குழுவினர்களே பாராட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் கடந்த சில நாட்களாக தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் மங்காத்தா படத்தில் பைக் ஓட்டியது அது இல்லை என்றும் ஒரு ஸ்டன்ட் கலைஞர் தான் என்றும் வேண்டும் என்று அஜித்தின் இமேஜை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

மங்காத்தா திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து வேண்டும் என்றே இதுபோன்ற ஒரு பிரச்சினையைக் கையிலெடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக அஜித் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டு வைப்பவர்களுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்றும் இதனை அடுத்து குற்றம்சாட்டிய நபர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சமூக வலைதளத்தை விட்டு ஓடி ஒளிந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த குறிப்பிட்ட காட்சியில் அஜித் தான் பைக்கை ஓட்டினார் என்பதை ஏற்கனவே பலமுறை தனது பேட்டியில் இயக்குனர் வெங்கட்பிரபுவே கூறி இருக்கும் போது தேவையில்லாத ஒரு பிரச்சனையை உருவாக்குவது நியாயமா? என நடுநிலையாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Leave a Reply