கீழடி அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம்:

 ஆச்சரிய தகவல்

கீழடியில் கடந்த சில மாதங்களாக அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் அதில் பழங்கால தமிழர்களின் நாகரீகம் குறித்த ஆதாரங்கள் பல கிடைத்து வருகின்றன

அந்த வகையில் தற்போது தங்க நாணயம் கிடைத்திருப்பதாக வெளியிட்டுள்ள தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

பதினேழாம் நூற்றாண்டு காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள் இருப்பதாகவும் இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்ற வடிவில் இருப்பதாகவும் அதன் கீழே சிங்க உருவம் காணப்படுவதாகவும் தெரிகிறது

பின்பக்கத்தில் 12 புள்ளிகள் மற்றும் அதன் கீழ் இரண்டு கால்கள் மட்டும் இரண்டு கைகளுடன் கூடிய உருவமாகவும் காணப்படுகிறது இந்த தங்க நாணயம் வீரராயன் பணம் என்று கூறப்படுகிறது கீழடியில் தங்க நாணயம் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply