அதிரடி அறிவிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் வருகைப்பதிவு அடிப்படையிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் தற்போது அரசு தேர்வுகள் இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட வேண்டும்
மேலும் மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு மட்டும் 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அறிவியல் பாடத்திற்கு மட்டும் 75 மதிப்பெண்கள் கணக்கிட வேண்டும் என்ற அறிவிப்பால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்