அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வழங்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது
ஆனால் அரசு பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி கணக்கிடுவது என்று தெரியவில்லை என்றும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்
பள்ளிக்கல்வித் துறை இதுகுறித்து அறிவுறுத்தல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது