சென்னையில் பரபரப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதை அடுத்து நேற்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த லாக்டவுனில் சென்னையில் வாகனங்களில் யாரும் செல்லக்கூடாது என்றும் மீறி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விசுவநாதன் எச்சரிக்கை விடுத்தும் நேற்று பலர் வாகனங்களில் சென்றனர்.
இதனையடுத்து நேற்று முதல் நாளே 2000 வாகனங்கள் முதல் நாளே பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வாகனங்கள் லாக்டவுன் முடிந்தவுடன் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் லாக்டவுனை மீறியதாக 2,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பல வழக்குகள் வட சென்னையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.