உங்களுக்கு செயலி உருவாக்க தெரியுமா?

 பிரதமரின் ரூ.20 லட்சம் பரிசுத்திட்டம்

சமீபத்தில் சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்போது சுயசார்பாக செயலிகளை வடிவமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அடல் இனோவேஷன் மிஷன் (Atal Innovation Mission) மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்கின்றன.

இந்த செயலி உருவாக்க சவாலில் வெற்றி ( 8 பிரிவுகளில்) பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.20 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 முக்கிய பிரிவுகளில் உட்பிரிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கும் பரிசு வழங்கப்படும்.
இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ள கீழ்கண்ட இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்: லிங்க்: https://innovate.mygov.in/app-challenge/. கடைசி தேதி ஜூலை 19

Leave a Reply