பொதுமக்கள் வீடுகளில் இருந்ததால் மின் கட்டணம் அதிகரித்திருக்க வாய்ப்பு:

நீதிபதிகள் கருத்து

மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘ஊரடங்கால் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது.

மேலும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்றே மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால் கூட மின் கட்டணம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறினர்.

இந்த நிலையில் மின்சாரச் சட்ட விதிகளை உயர்நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டி, அளவுக்கு அதிகமான மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அதிமுக அரசு நியாயப்படுத்துவது குடிமக்களிடம் காட்டும் பொல்லாத செயல் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply