ஆட்சியை பிடித்தது ஆளுங்கட்சி:

எதிர்பார்த்த வெற்றி இல்லை என சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு

சிங்கப்பூரில் கொரோனா’ அச்சுறுத்தலையும் மீறி நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சியான பீப்பிள் ஆக் ஷன் கட்சி மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை கைபற்றி, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

எனவே சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன்’ கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது

ஆளும் ‘பீப்பிள் ஆக் ஷன்’ கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்தது என்பதும், எதிர்கட்சியான ‘வொர்க்கர்ஸ் பார்ட்டி’ கட்சி, 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் பிரித்தம் சிங், பார்லி., எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

வெற்றிக்கு பின் செய்தியாளர்களிடம் பிரதமர் லீ செய்ன் லுாங் கூறுகையில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், ஓட்டு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றார்

Leave a Reply