திருக்குறள் பெருமை குறித்து ஆங்கிலத்திலும் பதிவு
பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு டுவிட்டில் திருக்குறள் குறித்து தமிழிலும் ஒரு டுவிட்டில் திருக்குறள் பெருமை குறித்து ஆங்கிலத்திலும் பதிவு செய்துள்ளார்
ஒரு டுவீட்டில் திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும் என்று கூறியுள்ளார்
இன்னொரு டுவீட்டில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்
பிரதமருக்கு திருக்குறள் மீது ஏற்பட்டுள்ள திடீர் பாசம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது