மாற்று திறனாளிக்கு 3 சதவீத இடஒதுக்கீடு

அரசு துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள வேலைகளில் மாற்று திறனாளிக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தது.

அரசுத் துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள வேலையில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் வழங்க வேண்டும். இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று கொள்கை, மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு பொருந்தாது. அதிகாரிகள், தங்கள் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை 3 மாதங்களுக்குள் தொகுத்து,  3 சதவீத வேலை வழங்க வேண்டும்.

Leave a Reply