ஒருசில சரத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமா?
புதிய கல்விக் கொள்கை குறித்து 3ம் தேதி முதலமைச்சர் முக்கிய ஆலோசனை செய்யவுள்ளார். இதுகுறித்து அவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
மேலும் புதிய கல்வி கொள்கையின் தமிழகத்திற்கான சாதக, பாதக அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது
மத்திய அரசு அறிவிப்பை அப்படியே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்றும், முழுமையாக விவாதித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை அப்படியே தமிழக அரசு ஏற்குமா? ஒருசில சரத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்