டிக்டாக் செயலியை அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய டிரம்ப் உத்தரவா?

பெரும் பரபரப்பு

இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா உள்பட வேறு சில நாடுகளிலும் டிக் டாக் செயலி தடை விதிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் அமெரிக்காவிலும் டிக் டாக் செயலி தடை விதிக்கப்படலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிப்பிட்டு டிக் டாக் செயலியை விற்குமாறு சீனாவின் பைட் டான்ஸ்’ நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

டிக்டாக் செயலியை கவனித்துக் கொண்டு இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்கலாம் அல்லது வேறு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை செய்யலாம் என்றும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்

Leave a Reply