கேரள தங்க கடத்தல் விவகாரம்:

சென்னையில் திடீர் பரபரப்பு

கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை செய்து வருவதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டி.ஐ.ஜி. கல்பனா தலைமையில் சென்னையில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 5 அதிகாரிகள் கொண்ட குழு நேற்று காலையில் இருந்து சென்னையில் ரகசிய விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

கடத்தல் தங்கம் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என்றும், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கின் விசாரணை காரணமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையிலும் முகாமிட்டுள்ளதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply