துபாய் செல்லும் என்.ஐ.ஏ அதிகாரிகள்
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் அடுத்த நடவடிக்கையாக என்.ஐ.ஏ அதிகாரிகள் இருவரும் துபாய் செல்லவுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத், துபாயில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ பிரிவு எஸ்.பி உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் துபாய் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
மேலும் என்.ஐ.ஏ குழு துபாய் வர அனுமதி துபாய் காவல்துறை வழங்கியுள்ளதாகவும் தகவல். தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே