அமைச்சர் விஜயபாஸ்கர்
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று திடீரென அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது இருப்பினும் அவரது உடல் நிலை தேறி வருவதாக எஸ்பிபி மகன் அவர்கள் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் எஸ்பிபி சரண் மற்றும் மருத்துவமனை எம்டி ஆகியோர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அறிந்தார்
மேலும் எஸ்பிபி அவர்கள் சிகிச்சைக்கு அரசு எந்த விதத்திலும் உதவ தயார் என்றும் அவர் கூறினார் எஸ்பிபி அவர்கள் விரைவில் நலமுடன் வீடு திரும்ப தான் பிரார்ட்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்
Spoke to legend Singer #SPBalasubrahmanyam son SPB Charan & MD of MGM Hospital. Enquired about his health condition. Assured support from Govt. Wishing him a speedy recovery #GetwellSoonSPBSir
— Dr C Vijayabaskar – Say No To Drugs & DMK (@Vijayabaskarofl) August 14, 2020