இளையராஜாவின் உருக்கமான வேண்டுகோள்
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியானது
இந்த நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என்று பல திரையுலக பிரமுகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா அவர்கள் வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார். நமது நட்பு பெறும் சினிமாவோடு முடிந்துபோகும் நட்பு அல்ல. எங்கேயோ மேடை கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த இசை நிகழ்ச்சி நமது வாழ்வும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமையும்
அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பு இசையும், இசை எப்படி சுரங்களை ஒன்றை ஒன்று விட்டுப் பிரியாமல் இருக்கின்றதோ அதே போல் எனது நட்பும் உறவும் நட்பும் எந்த கால பிரிந்ததில்லை நாம் இருவரும் சண்டை போட்டாலும் அது நட்புக்கான சண்டை என்பதை நீயும் அறிவாய் நானும் வருவேன்
அதனால் நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நிச்சயமாக நீ மீண்டு வருவாய் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது அது நிஜமாக நடக்கட்டும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்
இளையராஜாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது